நடிகர் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள “விடுதலை” திரைப்படத்தை பார்த்த பிரபலம் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
சமீபத்தில் இப்படத்தின் டிரெயிலர் சமீபத்தில் வெளியானது. இத்திரைப்படம் மார்ச் 31ம் தேதி உலகம் முழுதும் திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்தனர். இதையடுத்து, படத்திற்கு சென்சார் குழுவினர் ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். சினிமாவின் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தை ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவன நிர்வாகி செண்பகமூர்த்தி பார்த்துவிட்டு, தனது டுவிட்டர் பக்கத்தில், “வெற்றிமாறனின் “விடுதலை” படம் பார்த்தேன். மிகப்பெரிய அனுபவமாக இருந்தது. இப்படம் சாதனை படைக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.