சென்னை: தமிழக அரசின் திட்டங்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அரசின் சார்பில் பத்திரிக்கை மற்றும் ஊடகங்களில் வெளியிடப்பட்டு வரும் விளம்பரங்கள் மக்களிடையே நல்ல வரவற்பை பெற்றுள்ளது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழகத்தை மின் பற்றாக்குறையிலிருந்து மின் மிகை மாநிலமாக மாற்றி முதலீடுகளை ஈர்த்து புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கியது, அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் 7.5% உள் ஒதுக்கீடு கொண்டு வந்து அதன் மூலம் ஏழை மாணவர்களின் மருத்துவ கல்வி கனவை நிறைவேற்றியது என மாணவர்கள், பெண்கள், விவசாயிகள் என அனைத்து மக்களுக்கும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இந்த சாதனை திட்டங்கள் குறித்து மக்களிடயே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக தமிழக அரசு “வெற்றி நடை போடும் தமிழகம்” என்ற தலைப்பில் விழிப்புணர்வு விளம்பரங்களை வெளியிட்டு வருகிறது.
இந்த விழிப்புணர்வு விளம்பரங்களில் தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் துறைவாரியாக இடம்பெற்றுள்ளது. இந்த விளம்பரங்கள் மூலம் அரசின் சாதனைகள் மக்களிடத்தில் எளிதில் சென்றடைந்துள்ளது.
அதேபோல், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சாதனை திட்டங்கள் மக்களிடத்தில் எளிதில் சென்று சேரும் வகையில் ஊடகங்களில் “வெற்றி நடை போடும் தமிழகம்” என்ற விழிப்புணர்வு பிரச்சார பாடல் ஒளிபரப்பபட்டு வருகிறது.
இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வெற்றி நடை போடும் தமிழகம் என்ற பாடலை, மக்கள் பொது இடங்களில் பாடுவதை பார்க்க முடிகிறது. இதே போல் பலர் இந்த பாடலை தங்களது செல்போன்களில் ரிங் டோன்களாகவும் (Ring Tone) வைத்துள்ளனர். இந்த விளம்பரங்கள் மூலம் தமிழக அரசின் சாதனை திட்டங்கள் மக்களை சென்றடைந்துள்ளதோடு, மக்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது.
தமிழக அரசின் “வெற்றி நடை போடும் தமிழகம்” என்ற பாடல் எதிர்கட்சியின் ஆதரவு சேனலான சன் டி.வியிலும் ஒளிபரப்பபட்டது. இது தி.மு.கவினரிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. தி.மு.க எம்.பி டாக்டர் செந்தில் குமார் சன் டி.விக்கு எதிராக புகார் தெரிவித்தார்.
“பிஸினஸ் வேற கட்சி வேற” என்று சமூக வலைதளங்களில் சன் டி.வியை கிண்டலடித்து மீம்ஸ்களும் வெளியிடப்பட்டது. ஆனால், இந்த விளம்பரம் மக்களிடையே ஆதரவு பெற்றிருப்பதால், அதனை தவிர்க்க முடியாமல் சன் டி.வி அப்பாடலை ஒளிபரப்பியது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசின் “வெற்றி நடை போடும் தமிழகம்” விழிப்புணர்வு பிரச்சாரம் தற்போது மக்கள் பிரச்சாரமாக மாறியுள்ளது. தேர்தல் நெருங்கி வரும் வேளையில் அரசின் திட்டங்கள் குறித்து மக்களிடைபே விழிப்புணர்வை ஏற்படுத்த அரசு எடுத்துள்ள இந்த முயற்சியை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.