சமீபத்தில் உதகையிலுள்ள சீகூர் வனப்பகுதியில் மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் திருவிழா பூஜையில் பங்கேற்ற 4 பெண்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர்.
உதகை அருகேயுள்ள சீகூர் என்ற பகுதியில் ஆனிக்கல் மாரியம்மன் என்ற கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் நேற்று கார்த்திகை சோமாவாரம் தீபம் திருவிழாவிற்காக கோயில் திறக்கப்பட்டு, அங்கு பூஜைகள் நடத்தப்பட்டது. இதில், அப்பகுதியில் இருந்து சுமார் 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்தனர். கோவிலுக்குச் செல்லும் வனப்பகுதியில் ஒடும் ஆனிக்கல் ஆற்றில் காலையில் குறைவான இருந்த நீர், மதியம் பெய்த கனமழையால் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. பக்தர்கள் ஆற்றைக் கடக்க முற்பட்டபோது, சரோஜா, வாசுகி, சுசிலா, விமலா ஆகிய 4 பெண்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.