அமைச்சர் மா.சுப்பிரமணியன் தமிழகத்தில் பரவி வரும் ஒமிக்ரான் எக்ஸ்பிபி, பிஏ2 வகை வைரஸ்; பற்றிய தகவலை தெரிவித்துள்ளார்.
சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தமிழகத்தில் ஒமிக்ரான் எக்ஸ்பிபி, பிஏ2 ஆகிய வகை வைரஸ்கள் பரவி வருவதாக தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்துகிறது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் புதிய வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில் இது குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தமிழக அரசு எடுத்து வருகிறது. இந்நிலையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தமிழகத்தில் எக்ஸ்பிபி, பிஏ2 ஆகிய வகை வைரஸ் பரவி வருகிறது என்று தெரிவித்தார். மேலும் ஒற்றை இலக்கத்தில் இருந்த கொரோனா வைரஸ் தொற்று தற்போது 70க்கும் மேல் அதிகரித்து உள்ளது, பொதுமக்கள் மாஸ்க் அணிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ள வேண்டும். தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுதும் கொரோனா வைரஸ் பாதிப்பின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.