ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ மற்றும் மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி ஆகிய திரைப்படங்களில் நடிகர் அஜீத் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதன் பின் அவர் சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

அஜீத் சமீபகாலமாக படங்களில் நடிப்பது மிகவும் குறைந்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு படம் என்ற வீதத்திலேயே நடிக்கிறார். ஆனால் இனிமேல் அவர் அதிக படங்களில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாராம். அதனால் அடுத்தடுத்து தன்னுடைய படங்களில் நடிக்க சில இயக்குனர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. இதில் ஹெச் வினோத் மற்றும் இயக்குனர் ஷங்கர் ஆகியோரோடு அஜீத் சமீபத்தில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளாராம். இயக்குனர் ஷங்கரின் ஸ்டைல் வேறு, அஜீத் ஸ்டைல் வேறு என்பதால் இந்த கூட்டணி அமையுமா என்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.



