ஷங்கர் – ராம்சரண் படத்தில் 3 வில்லன்களா?

Filed under: சினிமா |

ராம்சரண் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர். சமீபத்தில் இவர் நடித்து வெளியான “ஆர்.ஆர்.ஆர்.” திரைப்படம் உலகளவில் பிரபலமானது. இயக்குனர் ஷங்கர் ராம்சரணின் அடுத்த படமான கேம்சேஞ்சர் படத்தை இயக்கவுள்ளார். தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார். இந்த படத்துக்கு இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் கதை எழுதியுள்ளார்.

இப்படத்தின் ஷூட்டிங் பல மாதங்களாக விட்டு விட்டு நடந்து வருகிறது. இயக்குனர் ஷங்கர் “இந்தியன் 2” படத்தின் ஷூட்டிங்கிலும் பிஸியாக இருப்பதே இந்த படத்தின் தாமதத்துக்குக் காரணம். இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் மார்ச் 27ம் தேதி ரிலீசாவுள்ளதாக சொல்லப்படுகிறது. இப்படத்தில் மூன்று நடிகர்கள் வில்லன்களாக நடிக்கப் போவதாக கூறப்படுகிறது. எஸ்.ஜே.சூர்யா, ஸ்ரீகாந்த் மற்றும் நவீன் சந்திரா ஆகிய மூவரும் இந்த படத்தின் பிரதான வில்லன்களாக நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.