ஷாருக் கானின் பட ஆடியோ சாதனை!

Filed under: சினிமா |

அட்லி இயக்கத்தில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான ஷாருக்கான் நடிப்பில் “ஜவான்” திரைப்படத்தின் ஷூட்டிங் முடிந்து பின் தயாரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன. படத்தில் தமிழ் நடிகர்களான விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர்.

இத்திரைப்படத்துக்கு அனிருத் இசையமைப்பாளராக பணியாற்றுகிறார். அவர் பாலிவுட்டில் அறிமுகமாகும் முதல் படம் இதுவாகும். இப்போது இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் உரிமையை டி சீரிஸ் நிறுவனம் 35 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவரை டி சீரிஸ் வாங்கிய ஆடியோ உரிமைகளிலேயே இதுதான் அதிகபட்சம். முதலில் ஜூன் மாதம் அறிவிக்கப்பட்டு இருந்த “ஜவான்” ரிலீஸ் தற்போது செப்டம்பர் 7ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.