சமீபத்தில் ஆர்.ஜே. பாலாஜி நடிக்கும் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.
இத்திரைப்படத்தில் ஆர்.ஜே.பாலாஜி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு “சிங்கப்பூர் சலூன்” என்று பெயரிடப்பட்டுள்ளது. படத்தை இயக்குனர் கோகுல் இயக்கி வருகிறார். ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். படத்தில் ஆர்.ஜே.பாலாஜி சலூன் கடை வைத்திருக்கும் நபராக நடித்து வருகிறார் என்பது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் இருந்து தெரிய வருகிறது. படத்தின் ஷூட்டிங்கின் போது இயக்குனர் கோகுலுக்கும், ஆர்.ஜே.பாலாஜிக்கும் கருத்து மோதல் எழுந்ததால் பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.