“ஸ்டார்” படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது?

Filed under: சினிமா |

கடந்த வாரம் கவின் நடிப்பில் “ஸ்டார்” திரைப்படம் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இத்திரைப்படத்தின் டிரெயிலர் வெளியானதிலிருந்து படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பு நிலவியது.

கடந்த வாரம் கவின் நடிப்பில் ‘ஸ்டார்’ திரைப்படம் வெளியாகியது. படம் முதல் மூன்று நாட்களில் 10 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் தமிழ் சினிமாவில் கவின் ஒரு ஸ்டார் நடிகராக உருவாகியுள்ளார். இத்திரைப்படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பிருந்த நிலையில் படம் ரிலீசான பின் கலவையான விமர்சனங்கள் வந்ததால் எதிர்பார்த்த அளவுக்கு வசூல் இல்லை என்று சொல்லப்பட்டது. ஆனாலும் படத்துக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இத்திரைப்படம் ஜூன் 14ம் தேதி பிரைம் வீடியோ தளத்தில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.