நடிகை ஹன்சிகாவுக்கு திருமணம் நடக்கப் போவதாக தகவல்கள் வெளியான நிலையில் அவரே வருங்கால கணவரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளதால் ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளைப் பகிர்ந்த வண்ணம் உள்ளனர்.
தமிழ் சினிமாவில் மிகவும் பிசியான கதாநாயகியாக வலம் வந்ததோடு அல்லாமல் ரசிகர்களின் மத்தியில் சின்ன குஷ்பூ என்று செல்லமாக அழைக்கப்பட்டவர் ஹன்சிகா மோத்வானி. தற்போது விரைவில் ஹன்சிகாவுக்கு திருமணம் நடக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சோஹைல் கதூரியா என்ற தொழிலதிபரை ஹன்சிகா மணக்கப் போகிறார். சோஹைல் கதூரியா நீண்ட நாட்களாக ஹன்சிகா குடும்பத்தின் நண்பர் என்று கூறப்படுகிறது. இதையடுத்து இப்போது முதல் முறையாக வருங்கால கணவர் சோஹைல் கதூரியாவின் புகைப்படத்தை ஹன்சிகா வெளியிட்டுள்ளார். பாரிஸின் ஈபிள்டவரில் தன் காதலை சோஹைல் வெளிப்படுத்த, ஹன்சிகா வெக்கத்தில் சிவக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.