சமூக வலைதளத்தில் ஹரிஷ் கல்யாண் தான் நடித்த திரைப்படம் ஆஸ்கர் நூலகத்தில் இடம்பெற கோரிக்கை விடப்பட்டுள்ளதாக வெளிவந்த செய்தியை மகிழ்ச்சியுடன் பதிவு செய்துள்ளார்.
கடந்த ஆண்டு ஹரிஷ் கல்யாண் நடிப்பில் “பார்க்கிங்” திரைப்படம் வெளியானது. இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இத்திரைப்படத்தில் நடித்த ஹரிஷ் கல்யாண், இந்துஜா மற்றும் எம் எஸ் பாஸ்கர் ஆகியோர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்தது. கடந்த சில நாட்களுக்கு முன் இந்த படம் ஐந்து மொழிகளில் உருவாக இருப்பதாக அதில் ஒரு வெளிநாட்டு மொழி என்றும் தயாரிப்பாளர் தரப்பு கூறியது. தற்போது பார்க்கிங் திரைப்படத்தின் கதையை ஆஸ்கர் நூலகத்தில் இடம்பெற விருப்பப்படுவதாக கோரிக்கை கடிதம் ஒன்று வந்துள்ளதை ஹரிஷ் கல்யாண் சமூக வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார். அப்பதிவில் அவர் ’ஒரு நல்ல கதை அதுக்கான இடத்தை தானே தேடி போகும்’ என்று குறிப்பிட்டுள்ளதையடுத்து இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது.