ஹரி & விஷால் படத்தின் கதாநாயகி யார்?

Filed under: சினிமா |

“யானை” திரைப்படம் இயக்குனர் ஹரிக்கு கடைசியாக அருண் விஜய் நடிப்பில் ரிலீசாகி சுமாரான வெற்றியைப் பெற்றது. இதற்கடுத்து ஹரி விஷால் நடிப்பில் ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளார்.

படத்தை பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தன்னுடைய ஸ்டோன்பென்ச் நிறுவனம் மூலமாக தயாரிக்கிறார். இந்த படத்தின் திரைக்கதை அமைக்கும் பணிகள் இப்போது முடிந்துள்ளது. ஜூலை மாதத்தில் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என்-று கூறப்படுகிறது. அதற்குள் விஷால் “மார்க் ஆண்டனி” படத்தை முடித்துவிட்டு வருவார் என தெரிகிறது. படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது. ஹரி இயகிய “யானை” படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்திருந்தார்.