ஏலியன்கள் மனித உருவத்தில் வாழத் தொடங்கிவிட்டதாக பிரபலமான ஹார்வர்டு பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் கூறப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உயிர்கள் வாழும் ஒரே கிரகமாக தற்போதைய அறிவியல் நிலவரப்படி பூமி மட்டுமே உள்ளது. ஆனால், நாம் தொடர்பு கொள்ள முடியாத தொலைவில் வேறு சில கிரகங்களில் நம்மைப்போல உயிரினங்கள் வாழலாம் என்ற நம்பிக்கை பலருக்கும் இருந்து வருகிறது. அந்த வெளிக்கிரக உயிர்களை குறிக்கும் சொல்தான் ஏலியன். உலகிலேயே ஏலியன் குறித்த கற்பனைகள் அதிகம் உலாவும் நாடு அமெரிக்கா. ஏலியன்கள் படையெடுப்பை மையப்படுத்தி அமெரிக்காவில் ஏராளமான கதை புத்தகங்கள், காமிக்ஸ், திரைப்படங்கள் ஆண்டுதோறும் வெளியாகின்றன. மேலும் சிலர் அவ்வபோது வானத்தில் மர்மமாக தோன்றும் சில காட்சிகளை படம்பிடித்து ஏலியன் விண்கலம் என பதிவிடுவதும் நடக்கிறது. ஆனால் இதுவரை பூமியில் ஒரு ஏலியனின் சடலம் கூட கண்டுபிடிக்கப்படவில்லை. ஹார்வர்டு பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், “பூமியில் ஏலியன்கள் மறைமுகமாக வாழ்ந்து வருகிறது. ஏலியன்கள் பல காலமாக பூமியில் மனிதர்களுக்கு தெரியாமல் வலம் வந்து கொண்டுள்ளது. மனிதர்களோடு வசித்து வருகிறது” என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் அறிவியல் நம்பிக்கையாளர்கள் இந்த கூற்றை மறுத்துள்ளனர். ஆதாரங்கள் அற்ற நம்பிக்கை மீதான கட்டமைப்பான கருதுகோள்களை நம்புவது அறிவுக்கு உகந்ததல்ல என்று அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.