ஹாலிவுட்டிற்கு செல்லும் டாப் ஹீரோ!

Filed under: சினிமா |

ஹாலிவுட்டில் நடிகர் தனுஷ் கால்பதித்துள்ளார். இவரைத் தொடர்ந்து நடிகர் அல்லு அர்ஜுன் ஹாலிவுட் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

நடிகர் தனுஷ் கோலிவுட், பாலிவுட்டை தொடர்ந்து ஹாலிவுட்டிலும் பிரபல நடிகராக இருக்கிறார். ஏற்கனவே இவர் நடித்த “தி கிரே மேன்” திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து “தி கிரே மேன் 2” திரைப்படத்திலும் தனுஷிற்கு முக்கிய ரோல் இருப்பதாக படத்தின் டைரக்டர்கள் ருசோ ப்ரதர்ஸ் உறுதி செய்தார். தனுஷ் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். சமீபத்தில் அமெரிக்காவின் நியூயார்க்கில் இந்திய வம்சாவளியினர் நடத்திய இந்திய ஆண்டு விழாவில் இந்தியா சார்பில் அல்லு அர்ஜுன் கலந்து கொண்டார். இவ்விழாவில் இந்திய கொடியை ஏந்தியபடி அல்லு அர்ஜுன் நடந்து வந்த போட்டோக்கள் வெளியாகி செம வைரலாகின. இந்த விழாவில் கலந்து கொண்ட நியூயார்க் மேயருக்கு அல்லு அர்ஜுன், புஷ்பா படத்தில் தான் நடித்த ஸ்டையிலை கற்றுக் கொடுத்ததாக தகவல் வெளியானது.

இந்நிலையில் அமெரிக்கா சென்ற போது ஹாலிவுட்டின் பெரிய டைரக்டர் ஒருவரை சந்தித்து அல்லு அர்ஜுன் பேசி உள்ளதாக சொல்லப்படுகிறது.அந்த டாப் டைரக்டர் இயக்கும் படத்தில் நடிக்க அல்லு அர்ஜுனுடன் ஹாலிவுட் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இந்த படத்தில் நடிக்க அல்லு அர்ஜுன் ஓகே சொல்லி விட்டாரா என்பதும் தெரியவில்லை.