இளையதலைமுறை நடிகர்களில் ஒருவரான ஹிப்ஹாப் தமிழா நடிக்கும் அடுத்த திரைப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
நடிகரும், இசையமைப்பாளருமான ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிக்கும் அடுத்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஹிப் ஹாப் தமிழா ஆதி இத்திரைப்படத்தில் ஹீரோவாக நடிப்பதுடன் இசையமைக்கவுள்ளார். “நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு” என்ற படத்தை இயக்கிய கார்த்திக் வேணுகோபாலன் படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஹிப் ஹாப் தமிழன் ஆதிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.