இயக்குனர் ஹெச் வினோத் தன் அடுத்த திரைப்படத்தின் ஹீரோ யோகி பாபு என்று கூறியுள்ளார்.
நடிகர் அஜீத் நடிப்பில் ஹெச் வினோத் தொடர்ந்து மூன்றாவது முறையாக திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்திற்குப் பிறகு அவர் விஜய் சேதுபதி நடிப்பில் ஒரு படத்தை இயக்க ஒப்பந்தமானார். அந்த படத்தை “மாஸ்டர்” மற்றும் “கோப்ரா” ஆகிய படங்களின் தயாரிப்பாளர் லலித் தயாரிக்க இருந்தார். ஆனால் இப்போது ஹெச் வினோத் அடுத்து கமல் படத்தை இயக்க உள்ளதாலும், விஜய் சேதுபதி பல படங்களில் நடிக்க உள்ளதாலும், லலித் தளபதி 67 படத்தில் பிஸியாக உள்ளதாலும் தற்போதைக்கு அந்த படத்தை கிடப்பில் போட்டுள்ளார்களாம். சமீபத்தில் இயக்குனர் ஹெச் வினோத் அளித்துள்ள பேட்டியில் அவரின் அடுத்த படத்தில் யோகி பாபு கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.