ஹெச் வினோத் பட்டியலில் லெஜண்ட் நடிகர்கள்!

Filed under: சினிமா |

“தி கோட்” படத்தில் நடிகர் விஜய், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வருகிறார். படத்தில் அவரோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

விஜய் இப்படத்துக்குப் பிறகு இன்னும் ஒரு படத்தில் மட்டும் நடித்துவிட்டு அரசியலில் கவனம் செலுத்தப் போவதாக கூறியுள்ளார். இந்த படத்தை இயக்க இயக்குனர் ஹெச் வினோத் ஒப்பந்தமாகியுள்ளார். படத்தின் தயாரிப்பாளர் யார் என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இப்படத்தில் ஒரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் விஜய் அளவுக்கு மாஸான ஒரு நடிகர் நடித்தால் சரியாக வரும் என ஹெச் வினோத் ஆலோசித்து வருகிறாராம். அந்த பட்டியலில் மோகன் லால் மற்றும் கமல்ஹாசன் ஆகியோரெல்லாம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இன்னும் அது குறித்த முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது.