10 தேசிய விருதுகள் பெற்ற தமிழ் திரைப்படங்கள்!

Filed under: சினிமா |

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான “சூரரைப் போற்று” திரைப்படம் மட்டும் 5 தேசிய விருதுகளை பெற்றதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.


68வது தேசிய விருதுகள் சற்றுமுன் அறிவிக்கப்பட்டது. தமிழ் திரைப்படங்கள் 10 தேசிய விருதுகளை பெற்றுள்ளது. அந்த வரிசையில் “சூரரைப் போற்று” திரைப்படத்திற்காக சிறந்த படம், நடிகர் சூர்யா மற்றும் அஜய் தேவ்கனுக்கு சிறந்த நடிகர், சிறந்த பின்னணி இசைக்காக ஜி.வி.பிரகாஷ்க்கும், சிறந்த நடிகைக்காக அபர்ணா பாலமுரளிக்கும், சிறந்த திரைக்கதைக்காக சுதா கொங்கரா மற்றும் ஷாலினி உஷா நாயருக்கும் வழங்கப்பட்டது. மேலும், “சிவரஞ்சினியும் சில பெண்களும்” என்ற திரைப்படம் சிறந்த படத்தொகுப்பு – ஸ்ரீகர் பிரசாத்திற்கும், சிறந்த தமிழ் படத்திற்கும், சிறந்த துணை நடிகை லக்‌ஷ்மி பிரியா சந்திரமௌலிக்கும் வழங்கப்பட்டது. மேலும், யோகி பாபு நடித்த “மண்டேலா” திரைப்படத்திற்காக சிறந்த வசனம் மற்றும் அறிமுக இயக்குநருக்காக மடோனா அஸ்வினுக்கும் வழங்கப்பட்டது.