10 புதிய பொருட்களை ஆவின் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. பல்வேறு பால் பொருட்களை ஆவின் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. தற்போது மேலும் 10 புதிய பொருட்களை அறிமுகம் செய்துள்ளது. தமிழக அரசு பொதுத்துறையின் நிறுவனமான ஆவின் பால் பாக்கெட்டுகள், தயிர், வெண்ணெய், நெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை தமிழகம் முழுவதும் பால் சொசைட்டி, ஆவின் பாலகங்கள் மற்றும் ஆவின் விற்பனையகங்கள் மூலம் விற்பனை செய்கிறது.
விரைவில் தண்ணீர் பாட்டில்கள் விற்கவும் ஆவின் நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் ஆவினில் பல வகை மில்க் ஷேக்குகள், ஐஸ் க்ரீம்களும் விற்பனையாகின்றன. இந்நிலையில் புதிதாக 10 பால் உணவு பொருட்களை ஆவின் அறிமுகப்படுத்த திட்டமிட்டது. அதன்படி சென்னை ஆவினில் 10 புதிய பால் பொருட்களை பால்வளத்துறை அமைச்சர் நாசர் அறிமுகம் செய்தார். இதில் பலாப்பழ ஐஸ்கிரீம், வெள்ளை சாக்லேட், கோல்ட் காபி, வெண்ணெய் கட்டி, பாஸந்தி, ஆவின் ஹெல்த் மிக்ஸ், பாலாடைக்கட்டி, அடுமனை யோகர்ட், ஆவின் பால் பிஸ்கட், ஆவின் வெண்ணெய் முறுக்கு ஆகியவை அடங்கும்.