100 மில்லியனை கடந்த “லியோ” பாடல்!

Filed under: சினிமா |

லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படத்துக்குப் பிறகு விஜய் நடிக்கும் “லியோ” திரைப்படத்தை இயக்கி வருகிறார். திரைப்படத்தின் மேல் ரசிகர்கள் மிகப்பெரியளவில் எதிர்பார்ப்பை வைத்துள்ளனர். படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான் ஆகியோர் வில்லன்களாக நடிக்கின்றனர். திரிஷா கதாநாயகியாக நடிக்க, அனிருத் இசையமைக்கிறார். படம் அக்டோபர் 19ம் தேதி ரிலீசாகிறது.

விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் 22ம் தேதி லியோ படத்தில் இடம்பெற்ற ‘நான் ரெடி’ பாடல் வெளியானது. இந்த பாடலை அனிருத் இசையில் விஜய்யே பாடியிருந்தார். விஷ்ணு எடவன் பாடல் வரிகளை எழுதியிருந்தார். இந்த பாடல் பலரையும் கவர்ந்த நிலையில் யுடியூபில் ஹிட்டானது. தற்போது இந்த பாடல் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனைப் படைத்துள்ளது.