100 மீட்டர் உள்வாங்கிய கடல்

Filed under: தமிழகம் |

ராமேஸ்வரத்தில் கடலின் நீர் மட்டம் 100 மீட்டர் தூரத்திற்கு உள்வாங்கி உள்ளது.

தமிழகத்தில் உள்ள கடற்கரைகளில் கடல் நீர் உள்வாங்கி வருவது தொடர்ந்து நடைபெறும் ஒன்றானது. சமீபத்தில் திருச்செந்தூர் கடல் உள்வாங்கியதை அடுத்து பக்தர்கள் பெரும் ஆர்வத்துடன் பார்த்தனர்.

இந்நிலையில் இன்று திடீரென ராமேஸ்வரம் கடலின் நீர்மட்டம் 100 மீட்டர் தூரத்திற்கு உள் வாங்கி உள்ளது. ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம் சங்குமால் கடற்கரை பகுதியில் 100 மீட்டர் தூரத்திற்கு கடல் நீர் உள் வாங்கியதால் கடலுக்கு அடியில் உள்ள பாறைகள் மட்டும் கடவுள் சிலைகள் வெளியே தெரிகிறது. இதையடுத்து சில நிமிடங்கள் கழித்து மீண்டும் கடல் இயல்பு நிலைக்கு வந்ததாக கூறப்படுகிறது. திடீரென கடல் உள்வாங்கியதை அடுத்து அங்குள்ள சுற்றுலா பயணிகள் பெரும் ஆச்சரியத்துடன் அதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.