11ம் வகுப்பு தேர்வில் மாணவிகள் அதிகம் தேர்ச்சி!

Filed under: தமிழகம் |

இன்று மாலை 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.

தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டார். அதன்படி 11ம் வகுப்பு பொதுத்தேர்வில் 90.94% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 90.07% பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில் 0.86% அதிகரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது. இதில் தேர்வு எழுதிய 7,76,844 பேரில் 7,06,413 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.