சமீபத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது. தற்போது 11ம் வகுப்பு பொது தேர்வு எப்போது என்பது குறித்த தகவலை அரசு தேர்வு துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2 மாதங்களுக்கு முன் தமிழகத்தில் 11ம் வகுப்பு பொது தேர்வு நடந்தது. இந்த பொது தேர்வில் தேர்வு தாள்கள் திருத்தப்பட்டு தற்போது மதிப்பெண்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 14ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 9:30 மணிக்கு ஆசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் அமைந்துள்ள அரசு தேர்வுகள் இயக்கத்தில் முடிவுகள் வெளியாக உள்ளதாக அரசு தேர்வுத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வில் 90%க்கும் அதிகமான மாணவர்கள் தேர்ச்சி பெற்ற நிலையில் 11-ம் வகுப்பு தேர்விலும் அதிகளவு மாணவ மாணவிகள் தேர்ச்சி பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது