12 பெண்கள் நரபலியா? உடல்கள் எங்கே??

Filed under: இந்தியா |

காணாமல் போன 12 பெண்களின் நிலை என்னவென்று போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

கேரள தம்பதி இருவர் மந்திரவாதி ஒருவருடன் சேர்ந்து பணம், செல்வம் குவிய வேண்டுமென்று பெண்களை நரபலி கொடுத்து, அந்த மனித கறியையும் சாப்பிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தேசியளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளான பகவந்த் என்னும் பகவல் சிங், அவரது மனைவி லைலா மற்றும் மந்திரவாதி முகமது ஷபி ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேற்கொண்ட விசாரணையில் நரபலி கொடுத்த பெண்களின் கறியை ஆயுள் நீட்டிப்புக்காக தம்பதியர் சாப்பிட்டுள்ளனர். பகவந்த் தனது இளமை நீட்டிக்க நரபலி கொடுத்த பத்மாவின் பிறப்புறுப்பை சாப்பிட்டதாக ஒப்புக் கொண்டுள்ளார். இந்த விசாரணை பல கோணங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் புது தகவல் கிடைத்துள்ளது. ஆம், கேரள மாநிலம் பத்தனம் திட்டா மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் காணாமல் போன 12 பெண்கள் நிலை என்னவென என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் தருமபுரி பத்மா உள்ளிட்ட 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட எலந்தூர் சுற்றுவட்டாரத்தில் மட்டும் 3 பெண்கள் காணாமல் போயுள்ளனர்.