அமமுக நிர்வாகிகள் உள்பட 1, 250 பேர் வழக்குப் பதிவு. போலீசார் நடவடிக்கை.

Filed under: தமிழகம் |

திருச்சியில் டிடிவி தினகரன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில்

அமமுக நிர்வாகிகள் உள்பட 1, 250 பேர் வழக்குப் பதிவு. போலீசார் நடவடிக்கை.

திருச்சி அண்ணா சிலை அருகே,
திமுக அரசை கண்டித்து அ.ம.மு.க சார்பில் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்டத்தில் டிடிவி தினகரன் பேசியதாவது:-
நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு தமிழக மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்
திமுக எப்பொழுது எல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ? அப்பொழுதெல்லாம் தமிழக மக்களின் உரிமைகள் பறிக்கப்படுகிறது.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கடந்த ஆறு மாத காலமாக பாஜகவுடன் கூட்டணி குறித்து முறைப்படி கலந்தாலோசித்து, அதிகாரப்பூர்வமாக கூட்டணியை அறிவித்துள்ளோம்.
எனவே பாராளுமன்ற தேர்தலில் நிபந்தனையற்ற ஆதரவை பாஜகவிற்கு தரவுள்ளோம்.
அமமுகவுடன்
கூட்டணி அமைக்க வேண்டுமென பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மனதார விரும்பி பேச்சுவார்த்தை நடத்தினார்.
உங்களின் ஆதரவோடு நாம் திருச்சி தொகுதியில் போட்டியிடலாம் அல்லது கூட்டணியை சேர்ந்த யாரேனும் போட்டியிடலாம், எனவே இரவு பகல் பாராது உழைத்து பணியாற்றி வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில்
தலைமை நிலைய செயலாளர் ராஜசேகரன், மாவட்டச் செயலாளர்கள் செந்தில்நாதன், கலைச்செல்வன், கழக அமைப்புச் செயலாளர் சாருபாலா தொண்டைமான், டோல்கேட் கதிரவன், மாவட்ட இளைஞரணி செயலாளர் நாகநாதர் சிவக்குமார்,முதலியார் சத்திரம் ராமமூர்த்தி, தருண், கல்நாயக் சதீஷ்,உறையூர் சாமி, உள்ளிட்ட மாநில மற்றும் மாவட்டக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள்
ராஜசேகரன்,யாரு பாலா தொண்டைமான் ஹலோ ஹலோ மாவட்ட செயலாளர்கள் கவுன்சிலர்
செந்தில்நாதன்,
கலைச்செல்வன் உள்ளிட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் 850 பெண்கள் உட்பட 1,250 பேர் மீது
சட்டவிரோதமாக கூடுதல்,
பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.