தன் இன்னுயிரை இழக்கும் தருணத்திலும், பிஞ்சு உயிர்களைக் காப்பாற்றிய ஓட்டுநர் சேமலையப்பன் வீட்டிற்கு சென்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆறுதல். மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி காங்கேயத்தில் அமைந்துள்ள திரு.சேமலையப்பன் அவர்களின் இல்லத்திற்கு நேரடியாக சென்று, அவரின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் ஆறுதல் தெரிவித்தார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
திண்டுக்கல் எம்.பி சச்சிதானந்தம் கோரிக்கை வெற்றி. மதுரை – பெங்களூர் வந்தே பாரத் இரயில் திண்டுக்கல் இரயில் நிலையத்தில் நின்று செல்லும். மத்திய இரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களிடம் சச்சிதானந்தம்.எம்.பி வலியுறுத்திய நிலையில் கோரிக்கையை ஏற்று திண்டுக்கல் இரயில் நிலையத்தில் வந்தே பாரத் இரயில் நின்று செல்லும் என தென்னக இரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
Continue reading …வெக்காளியம்மன் திருக்கோவிலில் தினம்தோறும் 100-நபர்களுக்கு வழங்கப்படும் அன்னதானத்தின் எண்ணிக்கை உயர்த்தப்படுமா….? மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் மனைவி திருமதி.துர்கா அவர்கள் தனது மகள் மற்றும் மருமகனுடன் ஆடி மாத வெள்ளிக்கிழமையான இன்று (26.07.2024) சென்னையிலிருந்து_திருச்சி உறையூரில் அருள்பாலிக்கும் வெக்காளி அன்னையை தரிசித்து செல்கிறார். ஏனென்றால் அன்னையின் அருள் மழை அப்பேற்பட்டது. இப்படியான கருணையே வடிவான காக்கும் தெய்வத்தின் சன்னதியில் தமிழக அரசு அறநிலையத்துறை சார்பில் தினம்தோறும் சுமார் 100-நபர்களுக்கு மட்டுமே அன்னதானம் வழங்க அனுமதி வழங்கி_அதற்கான டோக்கன் […]
Continue reading …தீண்டாமை அதிகம் நிலவும் மாவட்டங்களில் முதலிடத்தை பிடித்துள்ளது மதுரை. தீண்டாமை வன்கொடுமை நிலவும் முதல் 10 இடத்தில் உள்ள மாவட்டங்கள், மதுரை, விழுப்புரம், திருநெல்வேலி, வேலூர், திருவண்ணாமலை, திருச்சி, சேலம், திண்டுக்கல், தஞ்சாவூர் மற்றும் கோயம்புத்தூர். தீண்டாமை 445 கிராமங்களில் நிலவுகிறது, அவற்றில் அதிகபட்சமாக மதுரை மாவட்டத்தில் 43 கிராமங்களில் தீண்டாமை நிலவி வருகிறது.
Continue reading …கொடைக்கானலில் போதை காளான் விற்பனை ஒருவர் கைது. திண்டுக்கல் கொடைக்கானல் பகுதிகளில் போதை காளான் விற்பனை செய்வதாக வந்த தகவலின் அடிப்படையில் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு டி.எஸ்.பி.பெனாசீர் பாத்திமா அவர்களின் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் விஜயகுமாரி தலைமையிலான போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது கொடைக்கானல் பூண்டி பகுதியில் போதைக்காளான் விற்ற பாலமுருகன் (வயது 43) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Continue reading …தீர்த்த கலயங்களை சுமந்து ராமேஸ்வரத்திற்கு பாதயாத்திரை. மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவிலிருந்து, குருஜி பிண்டு மண்டூல் தலைமையிலான 32 பேர் கடந்த 15 ம் தேதி ரயிலில் புறப்பட்டு விஜயவாடா வந்து அங்கிருந்து மதுரை வந்தடைந்தனர். வெள்ளிக்கிழமை, மதுரை மீனாட்சி அம்மனை தரிசனம் செய்த பிறகு, பாதயாத்திரையாக மதுரை வைகை ஆற்றில் தீர்த்தங்களை எடுத்து தோளில் சுமந்து கொண்டு, மானாமதுரை வழியாக ராமேஸ்வரத்திற்கு சென்றனர்.
Continue reading …பழுதடைந்த ரத்த சேகரிப்பு பேருந்தால் ரத்த சேகரிப்பு பாதிப்பு. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள நடமாடும் ரத்த சேகரிப்பு பஸ் மற்றும் இரண்டு ரத்த சேகரிப்பு வேன்கள், கடந்த பதினைந்து ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்து வருகின்றன. இந்த நிலையில், ரத்த சேகரிப்பு பஸ் பழுதடைந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், ரத்த சேகரிப்பு தேவையை பூர்த்தி செய்ய முடியாத சூழ்நிலை நிலவுகிறது. உடனடியாக இவற்றை சரி செய்ய வேண்டும் என்று மருத்துவமனை ஊழியர்கள் கூறுகின்றனர்.
Continue reading …மொரிஷியஸ் ஹை கமிஷனர், மீனாட்சி அம்மன் தரிசனம். இந்தியாவில் உள்ள மொரிஷியஸ் நாட்டின் ஹை கமிஷனர், அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் வந்தார்..மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயிலுக்கு இன்று (3.7) மொரிஷியஸ் நாட்டின் ஹை கமிஷனர் ஹெச். தில்லும் தனது மனைவியுடன் சுவாமி மற்றும் அம்மன் தரிசனம் செய்தார். கோயில் நிர்வாகம் சார்பில் அவர்களுக்கி வரவேற்பு அளிக்கப்பட்டது.
Continue reading …வைகை அணையில் மூன்று மாவட்ட ஆட்சியர்கள். வைகை ஆணையில் இருந்து விவசாயத்திற்காக தண்ணீரை, இன்று (3.7) மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மா.சௌ.சங்கீதா, தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மொ.நா.பூங்கொடி ஆகியோர் திறந்து வைத்தார்கள். பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
Continue reading …*உ.பி கூட்ட நெரிசல் 122 பேர் பலி* உத்தரபிரதேசம், ஹத்ராஸில் ஆன்மிக வழிபாடு நிகழ்ச்சியில் அதிர்ச்சி சம்பவம் கோயிலில் கூட்டநெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 122ஆக அதிகரிப்பு . போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவு.
Continue reading …