133 கிலோ இறைச்சி பறிமுதல்!

Filed under: தமிழகம் |

உணவுப் பாதுகாப்பு அலுவலர் சேலம் மாவட்டத்தில் உள்ள பிரபல அசைவ ஓட்டல்களில் அதிரடி சோதனை நடத்தினர். இச்சோதனையில் 113 ஓட்டல்களில் நடத்தப்பட்டது.

இதில் சுமார் 19 ஓட்டல்களில் சுமார் 133.8கிலோ கெட்டுப்போன சிக்கன், ஆட்டுக்கறி, மீன், நண்டு போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு ரூ.34,650 ஆகும்.

சுகாதாரமற்றை முறையில் உணவுகளை தயார் செய்த 8 கடைகளுக்கு ரூ.13000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் 22 கடைகளுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டது.