19ம் தேதி வரை இடி மின்னலுடன் மழை!

Filed under: தமிழகம் |

இந்திய வானிலை ஆய்வு மையம் டிசம்பர் 19ம் தேதி வரை இடி மின்னலுடன் மழை பெய்யும் என்று அறிவித்துள்ளது.

அந்தமான் அருகே வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக்கி அதே பகுதியில் நீடித்து வருவதாகவும் இதன் காரணமாக தமிழ்நாட்டில் வரும் 19ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நகரத் தொடங்கியதும் கனமழை பெய்யும் என்று கூறப்படுகிறது. தற்போதைய நிலையில் இந்த காற்றழுத்த தாழ்வு இலங்கையை நோக்கி நகர அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.