அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் மின் கட்டணம் முறையில் மாற்றம் ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
மத்திய அரசு 2024ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் மின் கட்டணத்தில் ஒரு முக்கிய மாற்றம் செய்ய முடிவு செய்துள்ளதாகவும் இதன்படி மின் தேவை அதிகமாக இருக்கும் நேரங்களில் 10 முதல் 20 சதவீதம் வரை மின்கட்டணத்தை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் சூரிய ஒளி கிடைக்கும் நேரத்தில் பயன்படுத்தும் மின்சாரத்திற்கு 10 முதல் 20% கட்டணத்தை குறைக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 2024ம் ஆண்டு ஏப்ரல் முதல் வணிக மற்றும் தொழில் துறைக்கு இந்த புதிய கட்டண முறை நடைமுறைக்கு வரும் என்றும் அதன் பிறகு படிப்படியாக வீடுகளுக்கும் நடைமுறைக்கு வர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.