2500 திரைகளில் வெளியாகும் “பதான்” திரைப்படம்!

Filed under: சினிமா |

ராஜஸ்தான் மாநிலத்தில் வெளிநாடுகளில் மட்டும் 2500 திரைகளில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. இத்திரைப்படம் ஜனவரி 26ம் தேதி வெளியாக உள்ளது.

ஷாரூக்கான், தீபிகா படுகோன் நடிப்பில் சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ள திரைப்படம் “பதான்.” இத்திரைப்படத்தின் பாடல் ஒன்றில் தீபிகா படுகோன் காவி நிற கவர்ச்சி ஆடை அணிந்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து பல மாநிலங்களில் இந்த படத்தை வெளியிட எதிர்ப்பு தெரிவித்து பலரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். 4 ஆண்டுகளுக்குப் பிறகு ஷாருக்கானின் படம் ரிலீசாக உள்ளதால் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதுவரை இந்தியாவில் எந்தவொரு திரைப்படத்துக்கும் இல்லாத அளவுக்கு வெளிநாடுகளில் மட்டும் 2500 திரைகளில் இந்த படம் ரிலீசாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.