இம்மாதம் 27ம் தேதி முதல் திருப்பதியில் பிரம்மோற்சவ விழா தொடங்க இருப்பதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
செப்டம்பர் 27 முதல் அக்டோபர் ஐந்தாம் தேதி வரை 9 நாட்கள் வருடாந்திர பிரம்மோற்சவ விழா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்பது நாட்கள் நடைபெறும் இந்த மெகா திருவிழா தொடக்கத்தை அடுத்த கொடியேற்று விழா நடைபெற உள்ளதாகவும் கோவிலில் உள்ள தங்க கொடிமரத்தில் மஞ்சள் நிறத்திலான கொடியில் சிவப்பு நிறத்தில் கருடன் உருவம் வரையப்பட்ட கொடி ஏற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரம்மோற்சவ விழாவின் கடைசி நாளில் சந்தனப்பொடி அபிஷேகம் செய்து நீராடல் செய்யப்படும் என்றும் பிரமோற்சவ விழா காரணமாக ஒன்பது நாட்களிலும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.