3 நாளில் 30 கோடி வசூல்!

Filed under: சினிமா |

தற்போது திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது சிவகார்த்திகேயனின் “டான்” திரைப்படம். ரிலீசாகி மூன்றே நாட்களில் இத்திரைப்படம் 30 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

டான் திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி முதல் நாளில் 13 கோடியும் இரண்டாவது நாளில் 11 கோடியும் மூன்றாவது நாளில் 9 கோடி வசூலாகியுள்ளது. இதுவரை மொத்தம் இந்த படம் 33 கோடி வசூல் ஆகியுள்ள நிலையில் இந்த படத்தின் பட்ஜெட்டை மொத்தம் 40 கோடிதான் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் பல திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படம் “டாக்டர்” படம் போலவே வசூலில் சாதனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அஜீத், -விஜய் படங்கள் திரையரங்க உரிமையாளர்களுக்கு நஷ்டத்தை கொடுத்து வரும் நிலையில் சிவகார்த்திகேயன் திரைப்படம் நல்ல லாபத்தைக் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.