35000 விமான பயணிகள் அவதி!

Filed under: உலகம் |

திடீரென ஜெர்மனியில் விமான நிலைய ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் 35000 பயணிகள் அவதியுற்றனர்.

விமான நிலைய ஊழியர்கள் ஜெர்மனியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீரென வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் 300க்கும் மேற்பட்ட விமானங்கள் புறப்படுவதிலும் தரை இறங்குவதிலும் சிக்கல் ஏற்பட்டது. இந்த வேலை நிறுத்தம் காரணமாக சுமார் 35 ஆயிரம் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உடனடியாக வேலை நிறுத்தத்தை நிறுத்த பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆறு சதவீதம் விலைவாசி அதிகரித்துள்ள நிலையில் விமான நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கூடுதலாக சம்பளம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து திடீரென ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் விமான நிலைய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.