37 நாடுகளில் நாளை வெளியாகும் “தி கேரளா ஸ்டோரி”!

Filed under: இந்தியா,உலகம்,சினிமா |

இலவச புரமோஷனாக அமைந்துள்ளது “தி கேரளா ஸ்டோரி” திரைப்படத்திற்கு பலதரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்ட எதிர்ப்புகள். இதையடுத்து இத்திரைப்படத்திற்கு வட மாநிலங்களில் பெரும் வரவேற்பு கிடைத்ததுள்ளதால், நாளை முதல் 37 நாடுகளில் இப்படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இத்திரைப்படத்தை பற்றி பிரதமர் மோடி பெருமையாக பேசியது பல நாடுகளில் உள்ள ஊடகங்களில் தலைப்பு செய்தியாக வெளியானது. இதையடுத்து இப்படத்தை 37க்கும் மேற்பட்ட நாடுகளில் நாளை வெளியிட அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளது என இந்த படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். இத்திரைப்படம் தமிழகம் மற்றும் மேற்குவங்கம் தவிர அனைத்து மாநிலங்களிலும் எவ்வித பிரச்சனையும் இல்லாமல் ஓடியது. கேரளாவில் இத்திரைப்படத்துக்கு எதிர்ப்பு இருந்தாலும் திரையரங்குகளில் ஓடிக் கொண்டுதான் இருக்கிறது.