சென்னை வானிலை மையம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை முதல் 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக அறிவித்துள்ளது.
தமிழகத்தின் தென் மாவட்டங்கள் உள்பட பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. ஒரு சில பகுதிகளில் ரெட்அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி ஆகிய 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.தமிழகம், புதுச்சேரியில் நாளை முதல் 4 நாட்களுக்கு மிதமான மழையே பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால், வட மேற்கு மற்றும் மத்திய மேற்கு கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும் அதன் பின்னர் அந்த தாழ்வு பகுதி தீவிரமடைய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.