திமுக முப்பெரும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் நமக்குத்தான் வெற்றி” என்று உரையாற்றி உள்ளார்.
திமுகவின் முப்பெரும் விழா நேற்று விருதுநகரில் நடைபெற்றது. இவ்விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் நமக்குதான் வெற்றி என்ற வகையில் தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். “2024ம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கான அடித்தளமாக இவ்விழா அமையும். நாடாளுமன்ற தேர்தலில் 40க்கு 40 இடங்களிலும் வெற்றி பெற வேண்டும். டில்லியில் யாரை அமரவைத்து என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களையும் ஒப்பிட்டால் தமிழகம்தான் வளர்ச்சியில் முதல் மாநிலமாக உள்ளது. பட்டினிச்சாவு இல்லாத மாநிலமாக தமிழகம் உள்ளது. இதுதான் திராவிட மாடல் ஆட்சி. மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட ஜிஎஸ்டி வரி உரிமையை பாதிக்கிறது. தமிழக ஆளுநர் மூலம் இரட்டை ஆட்சியமைக்க பார்க்கிறார்கள். அதை தடுப்பதற்கு நாம் 40க்கு 40ல் வெற்றி பெற வேண்டும். நாற்பதும் நமதே நாளை நமதே” என்ற வாசகத்துடன் ஸ்டாலின் தனது உரையை முடித்தார்.