பொன்மலை ரயில்வே பணிமனையில், ரெயில்வே ஊழியர்கள் 4000பேர் வேலை நிறுத்த போராட்டம்.
எஸ்.ஆர்.எம்.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் எஸ்ஆர்எம்யூ தொழிற்சங்க மாநில துணை பொது செயலாளர் வீரசேகரன் தலைமையில் ரயில்வே ஊழியர்கள் இன்று ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
பொதுத்துறை நிறுவனமான ரெயில்வேயை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும், 44 தொழிலாளர் நலச் சட்டங்களை 4 சட்டங்களாக மாற்றம் செய்ததை கண்டித்தும், புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்றையதினம் திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் பணியாற்றும் எஸ்ஆர்எம்யூ தொழிற்சங்கத்தைச் சேர்ந்த ரயில்வே ஊழியர்கள் 4000பேர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ரயில்வே தொழிலாளர்கள் பேரணியாக வந்து ரயில்வே பணிமனை வாசலில் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தால் பணிமனையில் பணிகள் பாதிக்கப்பட்டன.