வரும் 26ம் தேதி இன்டர்நெட் தொழில்நுட்பமான 5ஜி ஏலமிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஏலத்தில் 4 முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்ள விண்ணப்பம் செய்துள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ, பாரதி ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகிய மூன்று தொலைதொடர்பு நிறுவனங்களும் அதானி நிறுவனமும் விண்ணப்பம் செய்துள்ளன. 4.3 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள 5ஜி அலைவரிசையை இந்த நான்கு நிறுவனங்களில் எந்த நிறுவனம் பெறும் என்பதை ஜூலை 26ம் தேதி வரை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இவ்வாண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பம் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.