5 நாட்களுக்கு தமிழகத்தில் மழை!

Filed under: தமிழகம் |

சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மழை- பெய்ய வாய்ப்பிருப்பதாக அறிவித்துள்ளது.

வானிலை ஆய்வுமையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் நாட்டிலுள்ள பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சியினால், இன்று முதல் வரும் 19ம் தேதிவரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்று கூறியுள்ளது. மேலும், வரும் மார்ச் 20ம் தேதி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் என்று கூறியுள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ள நிலையில், மீனவர்கள் கடலுக்குச் செல்ல எச்சரிக்கை விடப்படவில்லை.