22 வயது வாலிபர் அருவியில் குளித்து கொண்டே செல்பி எடுத்த போது 50 அடி பள்ளத்தில் விழுந்து உயிருக்காக போராடிக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
செல்பி எடுக்கும் மோகத்தால் எத்தனை ஆபத்துகள் வந்தாலும் மக்களுக்கு விழிப்புணர்வில்லை. ஆபத்தான இடங்களில் செல்பி எடுக்க கூடாது என ஏற்கனவே பலமுறை அறிவுத்தப்பட்டும், ஆபத்தை கண்டு கொள்ளாமல் பல இளைஞர்கள் செல்பி எடுத்து தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் தடை செய்யப்பட்ட மாசிலா அருவியில் மேல் பகுதியில் 22 வயது வாலிபர் குணால் என்பவர் குளித்துக்கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் ஐம்பதடி ஆள பள்ளத்தில் விழுந்து படுகாயமடைந்தார். திருச்சி தொட்டியம் பகுதியை சேர்ந்த குணால் கீழே விழுந்ததில் கை கால்கள் எலும்புகள் முறிந்து உள்ளதாகவும் தற்போது அவர் உயிருக்கு போராடி வருவதாகவும் கூறப்படுகிறது.