7 குளங்களைக் காணவில்லையா?

Filed under: தமிழகம் |

சினிமா பாணியில் குளங்களை காணவில்லை என்று புகாரளிக்கப்பட்டுள்ள சம்பவம் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் புதூர் கிராமத்தில் கடந்த 2018ம் ஆண்டில் தனியார் நிலம் ஆக்கிரமிப்பு செய்ததாகவும் இதனால், அங்கிருந்த 7 குளங்களைக் காணவில்லை என்று அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் புகார் கூறி வருகின்றனர். சிவக்குமார் என்ற இளைஞர் புதூர் கிராமத்திலிருந்த 7 குளங்களை 2018 முதல் காணவில்லை என்று வட்டாச்சியர் முதல் மாவட்ட ஆட்சியர் வரை பல அதிகாரிகளிடம் புகாரளித்துள்ளார். புகாரளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இன்று, 7 குளங்களைக் காணவில்லை என்று எழுதப்பட்ட வாசகங்கள் அடங்கிய பெயர் பலகையுடன் அவர், கோட்டாட்சியரிடம் புகார் மனு அளித்தார். இக்குளங்களைக் காணாததால், தன் வாழ்வாதாரம் மற்றும் கால்நடைகளின் நீராதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.