தேர்தல் ஆணையம் குடியரசு தலைவர் தேர்தலுக்காக கொடுக்கப்பட்டுள்ள மனுவில் 79 மனுக்கள் நிராகரிப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
பாஜக கூட்டணி சார்பில் திரபுபதி முர்மு மற்றும் எதிர்கட்சிகளின் சார்பில் யஷ்வந்த், சின்ஹா ஆகியோரும் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டிடுகின்றனர். இத்தேர்தலில் மொத்தம் 87 பேர் போட்டியிடுவதற்கு விண்ணப்பம் செய்துள்ளனர். அதில் 79 மனுக்கள் உரிய தகுதிகளைப் பூர்த்தி செய்யாததால் நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. யஷ்வந்த் சின்ஹா, திரௌபதி முர்மு ஆகிய இருவரின் வேட்புமனுக்கள் சரியாக இருந்ததால் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. யஷ்வந்த் சின்ஹா, திரௌபதி முர்மு ஆகிய இருவரின் வேட்புமனுக்கள் ஏற்று கொள்ளப்பட்டதால் இருவரும் போட்டியில் கலந்து கொள்வது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநிலங்களவை செயலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளது. யஷ்வந்த் சின்ஹா, திரௌபதி முர்மு தவிர மேலும் 6 பேர் குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.