9 கோடியில் அஜீத் என்ன வாங்கினார்?

Filed under: சினிமா |

கடந்த சில நாட்களாக அஜீத்தின் “விடாமுயற்சி” படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடந்தது. நேற்று முன்தினம் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தது என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அஜீத் படக்குழுவினர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படமும் இணையத்தில் வைரலானது. அஜீத் உட்பட குழுவினர் சென்னை திருப்புகின்றனர் என்றும் இதையடுத்து ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெறும் என்றும் அத்துடன் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பு முடிவடைவதாகவும் கூறப்பட்டது. அஜர்பைஜான் நாட்டில் ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு முடிந்தவுடன் இயக்குனர் உட்பட அனைவரும் சென்னை திரும்பினர். அஜீத் மட்டும் இன்னும் சென்னை திரும்பவில்லையாம். அவர் தற்போது துபாயில் இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே துபாயில் அவர் சொந்த வீடு வாங்கி இருப்பதாக கூறப்பட்டது. தற்போது ரூபாய் ஒன்பது கோடி மதிப்புள்ள பெராரி காரை அவர் துபாயில் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. துபாயில் சிவப்பு நிற பெராரி காருடன் அஜீத் இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.