Home » Archives by category » அரசியல்

அமைச்சர் கே.என்.நேருவுக்கு உடல் நலக்குறைவு!

பெரம்பலூர் பாராளுமன்ற வேட்பாளரும் நகர்ப்புற துறை அமைச்சர் அமைச்சர் கே.என் நேரு அவரது மகன் அருண் நேருவுக்கு குளித்தலை சட்டமன்ற தொகுதி பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். அச்சமயத்தில் கரூர் அருகே உள்ள தோகைமலை கொசூரில் “எனக்கு மயக்கமாக இருக்கிறது. என்று ஒரு வரி மட்டும் பேசிவிட்டு கிளம்புறேன். “எனது துறையின் கீழ் வரும் குடிநீர் வாரிய பிரச்சினைகளை இப்பகுதியில் கண்டிப்பாக தீர்த்து வைப்பேன்” எனத் தெரிவித்துவிட்டு பிரச்சார வாகனத்திலிருந்து கீழே இறங்கி தனது காரில் ஏறி மருத்துவமனைக்குச் […]

சுயேட்சை வேட்பாளருக்கு ரூ.921 கோடி சொத்தா?

Comments Off on சுயேட்சை வேட்பாளருக்கு ரூ.921 கோடி சொத்தா?

தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் 18வது மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுவதாகவும் மக்களவை தேர்தலோடு 4 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தலும் நடைபெறும் என்று அறிவித்தார். நாடு முழுவதும் அதன்படி தேர்தல் விதிகள் அமல்படுத்தப்பட்டது. பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். மதுரை மக்களவை தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் கன. வேழவேந்தனுக்கு ரூ. […]

Continue reading …

அதிமுக பணப்பட்டுவாடாவா?

Comments Off on அதிமுக பணப்பட்டுவாடாவா?

அலங்காநல்லூரில் தேனி தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணசாமியின் ஆதரவாளர்கள் பணப்பட்டுவாடா செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. வீதி, வீதியாக சென்று வேட்பாளர்களும் வாக்குகளை சேகரித்து வருகின்றனர். தேர்தல் பரப்புரைக்கு இடையே அலங்காநல்லூரில் அதிமுக நிர்வாகிகள் பணப்பட்டுவாடா செய்யும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், நிர்வாகிகளுடன் இணைந்து கிராமம் கிராமமாக அதிமுக வேட்பாளர் பிரச்சாரம் செய்தார். அப்போது அலங்காநல்லூர் அருகே கல்லணை கிராமத்தில் பெண்களை […]

Continue reading …

செந்தில் பாலாஜியின் காவல் 30வது முறை நீட்டிப்பு!

Comments Off on செந்தில் பாலாஜியின் காவல் 30வது முறை நீட்டிப்பு!

சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 30வது முறையாக நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. கடந்த 2023ம் ஆண்டு ஜூன் 14ம் தேதி செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமலாக்கத் துறையினர் குற்றப்பத்திரிக்கை மற்றும் ஆவணங்களை தாக்கல் செய்திருந்தனர். 3,000 பக்கங்களுடன் கூடிய இக்குற்றப்பத்திரிகை நகல் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டது. சென்னை புழல் […]

Continue reading …

பிரியங்கா காந்தி அடுக்கடுக்கான கேள்விகள்!

Comments Off on பிரியங்கா காந்தி அடுக்கடுக்கான கேள்விகள்!

பிரியங்கா காந்தி இந்திய இளைஞர்கள் 83 சதவீதம் பேர் வேலை வாய்ப்பு இல்லாமல் இருப்பது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார். பிரியங்கா காந்தி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்காக தனது பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளார். மோடி அரசை நோக்கி அவர் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அவர், “இந்திய இளைஞர்களில் 83 சதவீதம் பேர் வேலை வாய்ப்பு இல்லாமல் இருப்பது ஏன்? ஆண்டுக்கு இரண்டு கோடி வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி […]

Continue reading …

நூறு நாள் வேலை திட்டத்தில் ஊதிய உயர்வு! தேர்தல் விதிமீறல்!

Comments Off on நூறு நாள் வேலை திட்டத்தில் ஊதிய உயர்வு! தேர்தல் விதிமீறல்!

மத்திய அரசு நூறு நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதிய உயர்வை அறிவித்திருப்பது தேர்தல் விதிமுறைகளுக்கு புறம்பானது என்று தென்காசி நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். புதிய தமிழகம் கட்சி தென்காசி நாடாளுமன்றத் தொகுதியில், அதிமுக கூட்டணியில் போட்டியிடுகிறது. செய்தியாளரிடம் பேசிய தென்காசி நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் கிருஷ்ணசாமி, “மத்திய அரசு நூறு நாள் வேலை திட்டத்திற்கான ஊதிய உயர்வை அறிவித்திருப்பது தேர்தல் விதிமுறைகளுக்கு புறம்பானது. ஊதிய உயர்வுக்கான அரசாணையை முன்னதாகவே போடப்பட்டிருப்பதால் இந்த […]

Continue reading …

அச்சப்படமாட்டோம்; சீமானின் தேர்தல் பரப்புரை!

Comments Off on அச்சப்படமாட்டோம்; சீமானின் தேர்தல் பரப்புரை!

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் எவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும் அச்சப்படமாட்டோம் என்று தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். மக்களவை தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டது. வேறு சின்னம் வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். இந்திய தேர்தல் ஆணையம் அதை நிராகரித்தது. இன்று கன்னியாகுமரி தொகுதி வேட்பாளர் மரிய ஜெனிபரை ஆதரித்து சீமான் […]

Continue reading …

தலித் வாக்குகள் பிரிவதால் திமுகவுக்கு வாய்ப்பா?

Comments Off on தலித் வாக்குகள் பிரிவதால் திமுகவுக்கு வாய்ப்பா?

ஜான்பாண்டியன் மற்றும் கிருஷ்ணசாமி என தென்காசியில் இரண்டு முக்கிய தலைவர்களும் போட்டியிடுவதால், தலித் வாக்குகள் பிரியும் என்றும் அதனால் திமுக வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதிமுகவின் கூட்டணி வேட்பாளராக டாக்டர் கிருஷ்ணசாமி பாஜகவின் கூட்டணி வேட்பாளராக ஜான்பாண்டியன் ஆகியோர் தென்காசி தொகுதியில் போட்டியிடுகின்றனர். மேலும் திமுக சார்பில் ராணி ஸ்ரீகுமார் மற்றும் நாம் தமிழர் கட்சியின் சார்பில் மதிவாணன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இத்தொகுதியில் தலித் வாக்குகள் அதிகம் இருப்பதால், தலித் சமுதாயத்தைச் சேர்ந்த இரண்டு […]

Continue reading …

ப.சிதம்பரம் எச்சரிக்கை..!

Comments Off on ப.சிதம்பரம் எச்சரிக்கை..!

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஜம்மு காஷ்மீருக்கு நடந்தது தமிழ்நாட்டிற்கும் நடக்கலாம் என எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்தது போல் தமிழ்நாட்டையும் பிரிக்க சதி நடந்து கொண்டிருக்கிறது. ஜம்மு காஷ்மீரை பிரித்தது போல் தமிழ்நாட்டையும் பிரிக்கலாம். மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு பிரிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்தியா கூட்டணி வெல்லாவிட்டால் ஜனநாயகம் மெல்ல சாகும். ஜனநாயகத்தை அரசியல் சாசனத்தை நலிந்த மக்கள் ஏழை மக்கள் கொடுக்கப்பட்ட மக்களுக்கான சுதந்திர உரிமைகளை […]

Continue reading …

வேறு கட்சிகளிலிருந்து பாஜகவில் சேர்ந்தவர்கள் இத்தனை பேரா?

Comments Off on வேறு கட்சிகளிலிருந்து பாஜகவில் சேர்ந்தவர்கள் இத்தனை பேரா?

80 ஆயிரம் பேர் வேறு கட்சிகளிலிருந்து பாஜகவில் இணைந்திருப்பவதாக தகவல் வெளியாகி உள்ளது. வரும் ஏப்ரல் 19ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை 18வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. மக்களவை தேர்தலோடு 4 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தலும் நடைபெறும். பதிவான வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும். இவ்வாறாக தமிழ் நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடக்கிறது என்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் […]

Continue reading …
Page 1 of 168123Next ›Last »