நேற்று இரவு பாகிஸ்தானின் எல்லையை ஒட்டியுள்ள பாக்திக்கா மற்றும் கோஸ்ட் நகரத்தின் அருகே நிலநடுக்கம் ஏற்பட்டள்ளது. இது 6.1 ரிக்டர் அளவில் பதிவாகி உள்ளது. இந்த நிலக்கடுக்கம் ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூல் மற்றும் பாகிஸ்தான் நகரங்களில் அதிகளவில் உணரப்பட்டுள்ளது.
இந்நிலையில் நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கியுள்ளது. அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் மவ்லாவி ஷபருதின் அளித்த தகவலில், இதுவரை 920 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 610க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
பேரிடரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆப்கான் மதிப்பில் ஒரு லட்சம் நிதியுதவியும், காயம் அடைந்தவர்களுக்கு 50,000 நிதியுதவியும் வழங்கப்படும். மேலும் உலக நாடுகள் ஆப்கானிஸ்தானுக்கு உதவ வேண்டும் எனவும் தாலிபான் அரசு கோரிக்கை விடுத்துள்ளது.