“பொன்னியின் செல்வன்” திரைப்படம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தை தனக்கு திரையிடப்பட்டு காண்பிக்காமல் வெளியிடக்கூடாது என்று வக்கீல் ஒருவர் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்.
மணிரத்னம் இயக்கி ரூ.500 கோடி பட்ஜெட்டில் தயாராகியுள்ள பிரம்மாண்டமான திரைப்படம் “பொன்னியின் செல்வன்.” இதன் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி வெளியிட அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ள நிலையில் திடீரென வக்கீல் ஒருவர் பொன்னியின் செல்வன் படக்குழுவினர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், “பொன்னியின் செல்வன்” படத்தில் வரலாற்று உண்மைகள் மறைக்கப்பட்டிருப்பதாகவும் அப்படத்தை தனக்கு திரையிட்டு காட்டாமல் திரையிடக்கூடாது என்றும் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.