சுமார் மூன்று ஆண்டுகளாக நடந்து வந்த “கோப்ரா” திரைப்படத்தின் டிரெயிலர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

“கோப்ரா” திரைப்படத்தின் படப்பிடிபப்பு கடந்த மூன்று ஆண்டுகளாக நடந்துவந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் முடிவடைந்தது. பின் தயாரிப்பு மற்றும் பிற பணிகள் தற்போது நடந்து வருகிறது. ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பின்னர் தேதி ஆகஸ்ட் 31ம் தேதிக்கு மாற்றப்பட்டது. இப்படத்தின் சென்சார் தகவல் மற்றும் ரன்னிங் டைம் தகவல்கள் வெளியாகி உள்ளன. ‘கோப்ரா’ படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் இந்தப் படத்திற்கு யூஏ சான்றிதழ் அளித்துள்ளனர். மேலும் இந்த படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 55 நிமிடங்கள் என உள்ளன. இதையடுத்து படத்தின் டிரெயிலர் எப்போது வெளியாகும் எனக் காத்திருந்த ரசிகர்களுக்கு ஆகஸ்ட் 25ம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினரிடமிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.



