முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று அமைச்சரவை கூட்டம் தொடங்கியது.
இக்கூட்டத்தில் மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் உட்பட பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக ஆலோசிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. அதனுடன் மாணவர்களுக்கு மடிக்கணினி, மின்சார கட்டண உயர்வு, ஆன்லைன் ரம்மிக்கு தடைச்சட்டம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரண அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரம், கொடநாடு கொலை வழக்கு என பல்வேறு விஷயங்கள் ஆலோசிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
எதிர்வரும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது, அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் வெள்ள தடுப்பு நடவடிக்கைகள், மழைநீர் வடிகால் பணி, பாதாள சாக்கடை திட்டம், பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிப்பதில் மாநில அரசின் நிலைப்பாடு, மாநில கல்வி கொள்கை, கல்வி தரத்தை மேம்படுத்துதல் மற்றும் தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் உள்ளிட்டவைகள் குறித்து இன்று நடைபெற உள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.