தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் உடல் உறுப்புகளை டிரோன் மூலம் கொண்டு செல்லும் புதிய சேவையை தொடங்கி வைத்தார்.
உடல் தானம் செய்வதற்கு பெரும்பாலும் உடல் உறுப்புகளை கொண்டு செல்வதற்கு வாகனங்களே பயன்படுத்தப்படுகிறது. இந்த வாகனங்கள் செல்லும் போது பெருமளவில் போக்குவரத்தை நெரிசலை சரி செய்வதும், மக்களுக்கு சிக்கல் ஏற்படுவதும் பெரும்பாலான இடங்களில் நாம் காண்கிறோம்.
உடல் உறுப்புகளை டிரோன் மூலம் கொண்டு செல்லும் சேவை தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இச்சேவையை மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் ஆகியோர் இன்று தொடங்கி வைத்தனர். சென்னையில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக உடல் உறுப்புகளை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட டிரோன் சேவை இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் உயிர்காக்கும் சேவையை மத்திய அமைச்சர் நிதின் கட்காரி மற்றும் தமிழக அமைச்சர் சுப்பிரமணியம் ஆகியோர் இணைந்து தொடங்கினர்.