யுஜிசி கல்லூரி வளாகம் மற்றும் விடுதிகளில் சிசிடிவி கேமரா கட்டாயமாக பொருத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. கல்லூரிகளில் நடத்தப்படும் ராகிங்கை தடுக்க அனைத்து பகுதிகளிலும் சிசிடிவி அமைக்க இந்த உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கல்லூரி, பல்கலைக்கழகங்களில் ராகிங் எனப்படும் சீண்டல் குற்றங்கள் தொடர்கதையாக இருந்து வருகிறது. ராகிங் குற்றங்களை குறைக்க கல்லூரி, பல்கலைக்கழக நிர்வாகங்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் நடப்பு கல்வியாண்டு முதல் ராகிங் தடுப்பிற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து யுஜிசி புதிய உத்தரவுகளை வெளியிட்டுள்ளது.